மரண அறிவித்தல்
திருமதி ஜீவதாசன் அனுஷா
பிறப்பு: 16.11.1986
இறப்பு: 03.10.2026
யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கைத் தாயகமாகவும், பிரான்ஸ், Achères நகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த ஜீவதாசன் அனுஷா அவர்கள், 03.10.2026 சனிக்கிழமையன்று அகாலமரணமடைந்தார் .
அன்னார், ஜீவதாசன் (ராசன்), கோணேஸ்வரி (லலி, கொழும்பு) தம்பதியினரின் அன்புமிகு மூத்த மகளும்,
சுஹானா, சுதேவ், சுதிர் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அஜிதா (கொழும்பு), அனேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதீஸ்குமார் (கொழும்பு), சிந்துயா (மிமி, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிஹானாவின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற தங்கராசா, சரஸ்வதி மற்றும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கம்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈஸ்வரதாஸ் (வவுனியா), ரவிதாஸ் (நீர்வேலி), சுபாகரன் (வவுனியா), நர்மதா, பிறேமினி, கேமலா, கந்தையா, காலஞ்சென்ற தர்மலிங்கம், இராஜேஸ்வரி, கமலநாயகி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சுபாசினி (சுவிஸ்), சுதர்சினி (லண்டன்), சுதாமதி (லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வராசா (கராஜ் துரை, நீர்வேலி), பாலசுப்பிரமணியம் (அப்பன், சுவிஸ்), தனபாலசிங்கம் (கிளி, கனடா), இராசேந்திரம்(ராசன், கனடா), புஸ்பலிங்கம் (சுவிஸ்), சிறிவர்ணர் (லண்டன்), மோகன் (லண்டன்), காலஞ்சென்ற திலகவதி, காலஞ்சென்ற நித்தியகலா, யசோதரா, கஜனி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
நினைவஞ்சலி
நினைவுகளின் வானில் என்றும் அணையாத ஓர் ஒளி…
சில உறவுகள் வாழ்வில் வந்து செல்பவை அல்ல…
நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தங்களின் அன்பை எழுதிச் செல்பவை.
உங்கள் பிரிவு எங்கள் இல்லத்தின் அமைதியிலும், எங்கள் இதயங்களின் ஆழத்திலும் ஒரு சொல்லொணாத வெறுமையை உருவாக்கியுள்ளது.
நேற்றுவரை எம்மோடு பகிர்ந்த புன்னகைகளும், அன்பான உரையாடல்களும், ஒன்றாகக் கழித்த இனிய பொழுதுகளும் இன்று காலத்தின் கரங்களில் நினைவுகளாக மாறியுள்ளன.
உறவுகளின் பிணைப்பில் நீங்கள் பதித்த அன்பின் சுவடுகளை எந்தத் தூரமும் அழித்துவிட முடியாது. காலம் நகர்ந்தாலும், நாட்கள் கடந்தாலும், உங்கள் நினைவுகள் எங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு இதயத்திலும் உயிரோடு வாழும்.
இறுதிக்கிரியைகள்
வியாழக்கிழமை, 12.11.2026
இடம்: Crématorium des Joncherolles
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France.
இறுதிக்கிரியைகள் (Cérémonie)
காலை 8:30 மணி – முற்பகல் 11:30 மணி வரை.
தகன நிகழ்வு (Crémation)
முற்பகல் 11:30 மணி – நண்பகல் 12:30 மணி வரை.
தொடர்புகளுக்கு:
அனேஸ் – சகோதரன்
தொலைபேசி: +33744185500
அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த விரும்பும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: சகோதரன் ஜீவதாசன் அனேஸ் மற்றும் குடும்பத்தினர்.
No tributes yet. Be the first to share your memories.
Your action was completed successfully.