யாழ். வல்வெட்டித்துறை, கொத்தியால் ஒழுங்கை, கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலராணி தயாநிதி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பார்பதிப்பிள்ளை - சின்னத்துரை தம்பதியினரின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற நீலாவதி - கருணாநிதி தம்பதியினரின் மருமகளும்,
தயாநிதி அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கரின் அன்புத் தாயும்,
டாலினின் (DALYN HY) அன்பு மாமியாரும்,
கல்பனா, கவிதா, கஜேந்திரா ஆகியோரின் சிறிய தாயாரும்,
சுகன்யா, சுரேஷ், தர்மவிலோஜினி, றோகினி, தாரணி, றாதிகா, கார்த்திக், அனுஷா ஆகியோரின் ஆசை மாமியாரும்,
காலம் சென்ற சிவகாமசுந்தரி, சந்தனக்கண்டு, தங்கத்திரவியம், கதிர்காமத்தம்பி (கதிர்), சண்முகவடிவேல், தங்கவடிவேல், மற்றும் கனகம்மா, சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரத்தினம் (கனகு ஐயா), பதுமநிதி, புஸ்பராணி, இந்திராணி, காலஞ்சென்ற சரஸ்வதி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.45 - 12.45 மணி வரை Joyce Chapel, Fawkner Memorial Park (1187 Sydney Road, Fawkner VIC 3060) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- தயாநிதி (கணவர்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
No tributes yet. Be the first to share your memories.
Your action was completed successfully.